

ஜூன் 21 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார் செயலாளர் கமால் பாஷா வரவேற்பு நிகழ்த்தினார். மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக அமைப்பு பொதுச் செயலாளர் பகுர்தீன் நன்றியுரை நிகழ்த்தினார். துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட தொகுதி வார்டு நகர ஓன்றிய கிளை என 40க்கும் மேற்பட்ட இடங்களில் கல்வி உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
