விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அட்டமில் பகுதியில் அரசு கலைகல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரிக்கு தளவாய்புரம் இனம்கோவில்பட்டி புத்தூர் மீனாட்சிபுரம்
இராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு கல்லூரி செல்லும் நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு கல்லூரி மற்றும் மாணவ மாணவிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டு அதை தொடர்ந்து இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் முயற்சியினால் இன்று தளவாய்புரம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் இனாம்கோவில்பட்டி
இராஜபாளையம் சமசிகாபுரம், சத்திரப்பட்டி வழியாக அரசுகலைக் கல்லூரிக்கு வழித்தடத்தில் புதிய பேருந்தை தங்கபாண்டியன் எம் எல் ஏ கொடியைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் முன்னாள் சேர்மன் சிங்கராஜ் நகரச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.