கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் காட்டு யானை புகுந்து சேதம் விளைவித்து உள்ளது.

நல் வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே மாவட்ட வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.