• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம்.., மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி தமிழக வெற்றிக்கழகம் அசத்தல்…

BySeenu

Jun 18, 2024

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து , வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்வதில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.. அவரது அன்பு கட்டளைக்கு இணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், இலவச படிப்பகம்,குருதி கொடை முகாம்,,சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி எனும் பகுதியில் ஒரு பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுத்து, அரிசி, மளிகை என வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார். மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்த நிலையில், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு, உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை வழங்கியுள்ளனர்.