• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..,

ByVasanth Siddharthan

May 4, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கடந்த 1997முதல் 2000 வரை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் படித்த மாணவர்களின் சந்திப்பு பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களான ஆசிரியர், தாசில்தார் ,வழக்கறிஞர் ,வங்கி உயர் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக வாட்ஸ் அப் குழு மூலம் நண்பர்களை ஒன்றிணைத்து இன்று பழனிகள் சந்தித்தனர். அப்போது தங்களது கல்லூரியில் படித்த அனுபவங்களையும் நெகிழ்ச்சிக்கான தருணங்களையும் ,ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் , தங்களது தொடர்பு எண்களை பகிர்ந்து கொண்டும் தங்களது தொழில் சார்ந்த கருத்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கியும் ஒருவருக்கொருவர் மகிழ்ந்தனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.