இந்தியாவில் இயந்திரக் கருவித் தொழில் தொடர்பான அனைத்து துறையினரையும் இணைத்து இயந்திர கருவி தொழில் வளர்ச் சிக்கென சிறந்த அமைப்பாக இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது…

இந்நிலையில் இந்த துறையில் உள்ள உலகாளவிய தொடர்புகளை இணைக்கும் வகையிலும் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர் சங்கம்,இம்டெக்ஸ் எனும் (IMTEX) உலோக பார்மிங் 2026 கண்காட்சியை பெங்களூரில் நடத்த உள்ளனர்..
2026 ஜனவரி 21ந்தேதி துவங்கி 25ம் தேதிவரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
இதில் இம்டெக்ஸ் 2026 கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நான்கு அரங்குகளில்,நடைபெற உள்ள கண காட்சியில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 600 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்…

குறிப்பாக உலோக ஃபார்மிங் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்,தொழில் நாட்டு வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம், உயர் உற்பத்தி தீர்வுகள்,,வாகன உதிரி பாகங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள், மின்சாரம், ரயில்வே, கட்டுமான உபகரணங்கள், பொது மற்றும் கனரக பொறியியல், மூலதனப் பொருட்கள், மின்னியல், மின்னணுவியல் முதலிய பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்வதாக தெரிவித்தனர்..
ஆசிய அளவில் மிகப்பெரிய உலோக பார்மிங் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப கண்காட்சியாக நடைபெற உள்ள இதில்,. உலோக உருவாக்கம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் உள்ள புதிய நடைமுறைகள், உபகரணங்கள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் வகையில் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்…




