• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

மாவட்டக் கிளையின் சார்பில் ஆசிரியர் கூட்டணி..,

ByM.S.karthik

Sep 7, 2025

Dr. இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 கடைப்பிடிக்கப்படுகிறது . அவர் ஆசிரியராக பணியாற்றியதோடு மட்டுமின்றி இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராகவும் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கலாச்சார தூதுவராகவும் செயலாற்றியவர்.
அன்னாரது பிறந்தநாளை தமிழ்நாடு தொடக்கபபள்ளி ஆசிரியா கூட்டணி – மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து அவரின் திருவுருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் பாரதி சிங்கம் மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார். இதில் அர்ஜுனன் – இளையராஜா ,ஆடம்ஸ் வெங்கட்ராமன்,முரளி ,சரவணக்குமார்,பரமேஸ்வரன், பீட்டர், ஜெபதுரை, உதயக்குமார், தட்சனாமூர்த்தி,சார்லட் சவுரி சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆறுமுகம் நன்றி உரை கூறினார்.