மதுரை அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக ‘ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு’
நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஜூனியர் சேம்பர் பயிற்சியாளர் ரங்கசாமி “சமுதாய வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அசோக் குமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை, வேதியல் துறை உதவி பேராசிரியர் தர்மானந்தம் தொகுத்து வழங்கினார்.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு
