பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தீபா ஆசிரியை கொலை வழக்கின் குற்றவாளியான வெங்கடேசன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஆசிரியையான தீபா என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளியான குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (37)என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ஆசிரியை தீபா கொலை விவாகாரம்.., வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…




