• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்தியபிரதேசத்தில் பெண் குழந்தையின் கையை ஒடித்த ஆசிரியர் கைது

Byadmin

Dec 30, 2022

மத்தியபிரதேசத்தில் பெண் குழந்தையின் கையை ஒடித்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் 5 வயது பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையை வீட்டருகே வசிக்கும் ஆசிரியர் ஒருவரிடம் ஆங்கில பாட டியூசனுக்கு அனுப்பினர். டியூசன் வகுப்பின்போது அந்த சிறுமி, கிளி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் தவறாக எழுதியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த சிறுமியின் கையை முறுக்கி தாக்கினார். அதில் சிறுமியின் கை எலும்பு முறிந்தது. சிறுமி வலியால் துடித்தாள். தகவல் அறிந்த பெற்றோர் தங்கள் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பெற்றோர் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.