• Sun. Mar 16th, 2025

ஜெய் இந்தியா கோசத்துடன் ஆசிரியர் கூட்டணி…

ஆசிரியர் தினத்தன்று கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய் என்ற கோரிக்கையை வலியுறுத்தி “ஜெய் இந்தியா” என்ற கோசத்துடன்,

இந்தியாவின் நான்கு எல்லைகளான கன்னியாகுமரி, அசாம், சேமநாத், வாகன எல்லை என இந்திய ஆசிரியர் தினமான செப்டம்பர்_5ல், டெல்லி நோக்கிய ஜெய் இந்தியா என்ற கோசத்துடன் ரதயாத்திரை அடுத்த மாதம் டெல்லியில் சங்கமித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ரத யாத்திரையை கன்னியாகுமரியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.