அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் இந்திய பயணத்தில் ஒரு பகுதியாக சில அமெரிக்க பொருள்களின் இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி பாதாம், ஆப்பிள், வால் நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சில எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான சுங்க வரியை அமெரிக்கா உயர்த்திய நிலையில் ஜூன் மாதம் 2019 ஆம் ஆண்டு 28 அமெரிக்க தயாரிப்புகள் மீதான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியது. ஜி-20 மாநாட்டுக்காக அமெரிக்க அதிபரின் வருகையால் தற்போது வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.