• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

3000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா குழும திட்டம்

Byகாயத்ரி

Nov 23, 2021

டாடா குழுமம் சூரிய ஒளி மின்கல உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்தினை தமிழகத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்டான் பகுதியில் 4 கிகா வாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்கல உற்பத்தி அலகு அமைக்கும் திட்டம் தொடர்பாக டாடா குழுமத்தின் சோலார் பவர் பிரிவு தமிழக அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு 3,000 கோடி ரூபாய் ஆகும். இந்த சூரிய சக்தி சேமிப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தின் சோலார் மின் உற்பத்தி அலகு தமிழ்நாட்டினை சூரிய சக்தி உற்பத்தி மையமாக நிலைநிறுத்தவும், தென்மாநிலங்களுக்கு புதிய முதலீடுகளை கொண்டுவரவும் உதவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஓரகடத்தில் 1.2 கிகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்கல உற்பத்தி தொழிற்சாலையை விக்ரம் சோலார் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் திறந்துள்ளது.இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த first solar நிறுவனம் சென்னை அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில் சோலார் மின் உற்பத்தி பிரிவை விரைவில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சூரியஒளி மின்சக்தி தயாரிப்பு ஆற்றலை பன்மடங்கு அதிகரிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.