சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
காசாவில் நடக்கின்ற பிரச்சனைக்கு மரியாதைக்குரிய மோடி அவர்கள் காரணம் என கூறுவது மக்கள் எப்படி ஒத்துக் கொள்ள முடியும் இது வந்து கண்டிக்கத்தக்கது.
அதில் சில நடிகர்கள் பேசிய பேச்சை நாn அவர்களுடைய பெயரை கூட சொல்ல நான் விரும்பவில்லை. மரியாதைக்குரிய பாரதப் பிரதமருக்கு இவர்கள் எந்த வகையிலும் அருகில் கூட வர முடியாது.

ஆனால் இவர்கள் என்ன கூறுகிறார்கள் அங்கு நடக்கக்கூடிய பிரச்சனைக்கு மரியாதைக்குரிய பாரத பிரதமர் காலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கீழ்த்தரமான அரசியலை தமிழகத்தில் இவர்கள் செய்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எல்லாம் எங்கே இருந்தீர்கள் இன்றைக்கு எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்களோ இலங்கையில் நமது தமிழர்கள் கொல்லப்படும் பொழுது அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை.
கள்ளக்குறிச்சியில் 63 பேர் சாகும்போது எந்த செய்தீர்கள் அதை பற்றியும் கவலைப்படவில்லை திருமாவளவன் அவர்கள் பஞ்சமஞ்சலத்தை எல்லாம் மீட்க வேண்டும் என எப்பொழுது சொல்கிறார் அரசாங்கம் முடியக்கூடிய கடைசி நேரத்தில் பேசுகிறார்.

ஆணவ படுகொலைகள் நடைபெறுகிறது அதை பற்றி பேசுவதற்கு உங்களிடம் ஆட்கள் இல்லை. வேறு மாநிலத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தவர்கள் தற்பொழுது வேறு நாட்டை பற்றி பேச சென்று விட்டார்கள்.
முதலில் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அவலங்களையும் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய மக்கள் விரோத பிரச்சனைகளையும் முதலில் எல்லோரும் பார்க்கட்டும் என்பது தான் என்னுடைய கருத்து.
நமது சொந்தங்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக
பாகிஸ்தானுக்கு சென்று அங்கு தீவிரவாதிகளை மட்டும் அடித்த ஆபரேஷன் சிந்து பற்றி உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
ஆக என் நாட்டு மக்களை பாதுகாக்க மரியாதைக்குரிய மோடி அவர்கள் எடுத்த நடவடிக்கைகளையும் நீங்கள் செவி சாய்க்க மாட்டீர்கள் பாராட்ட மாட்டீர்கள்
ஆனால் இன்னொரு நாட்டில் நடக்கின்ற அந்த ஒரு பிரச்சனையை அங்குள்ள கொடூரத்தை பார்த்து இங்க மோடி தான் காரணம் என்று சொல்லும் அளவிற்கு கீழ்த்தரமான அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது இதை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது தான் என்னுடைய கருத்து
எதிர்க்கட்சியில் குழப்பம் இல்லை நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று சொன்னீர்கள் அல்லவா இதற்கு பதில் சொல்லட்டும்.
காங்கிரஸ் கூறுகிறது நாங்கள் 117 இடத்திற்கு மேல் கேட்போம் என்று சொல்லும் பொழுது, நீங்கள் கூறினீர்கள் மற்ற கட்சிகளுக்கு எல்லாம் பிஜேபி உரிமையை கொடுப்பதில்லை என்று
இன்று நீங்கள் கூறுங்கள் இன்றைக்கு காங்கிரசை நீங்கள் தான் அடிமைப்படுத்தி வைத்துள்ளீர்கள். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகளுக்கு துணிச்சல் இருக்கின்றதா தாங்கள் கேட்கின்ற இடத்தை கொடுக்கவில்லை என்றால் வெளியே வருவோம் என்று
நாங்கள் மறுபடியும் சொல்கிறோம் தேர்தல் நெருங்க நெருங்க தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெறும்.
இந்தி கூட்டணி நிச்சயமாக அது காங்கிரஸ் கட்சி ஆகினாலும் சரி திருமாவளவன் கம்யூனிஸ்டுகள் என்றாலும் சரி நிச்சயமாக பிரச்சனை வரும் அவர்கள் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்க முடியாது. அவர்கள் தோல்வி அடைவது உறுதி.
விஜய் இன்று மக்களை சந்திக்க சென்றுள்ளார் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் மக்களை சந்திப்பது ஆரோக்கியமான சூழ்நிலை தான்.
நான் ஏற்கனவே சொன்னது போல் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் போது கொஞ்சம் முறைப்படுத்தி அங்கு யாரும் மயக்கம் அடையாமல் உடல்நிலை சரியில்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என எனது கருத்து
ஒரு கட்சிக்கு மாறுபட்ட வகையில் விடுமுறை கொடுப்பது இன்னொரு கட்சிக்கு விதிமுறைகள் வேறு மாதிரி கொடுப்பது ஆளும் கட்சியினருக்கு விதிமுறையே கிடையாது
ஆனால் எதிர்க்கட்சிகள் என்ன கேட்டாலும் அதற்கு உடனடியாக அவ்வளவு கட்டுப்பாடு அவ்வளவு விதிமுறைகள் நீங்கள் முப்பெரும் விழா நடத்தினீர்களே எவ்வளவு கட்டுப்பாடு போட்டீர்கள் கட்டுப்பாடு இல்லை ஆக இது மிக பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்
விஜய் இடம் நான் கேட்பது என்னவென்றால் தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடைபெறுகிறது ஆகையால் உங்களுடைய தாக்குதல் திமுக மீது மட்டும் இருக்கட்டும் அவரை வீட்டிற்கு அனுப்புவதில் உங்கள் பங்கு இருக்க வேண்டும் என எனது கோரிக்கை எனக் கூறிவிட்டு சென்றார்.