• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்..!

Byவிஷா

Sep 2, 2023

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளிகளான இங் கொக் செங், டான் கின் லியான் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து சிங்கப்பூர் அதிபராக தேர்வாகியுள்ளார். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை.
வாழ்க்கை வரலாறு:
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர் கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்தது. 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இது பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பின் நடைபெற்ற மூன்றாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.