• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும்…

ByG.Suresh

Dec 10, 2023

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்த உள்ளதாக சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தீர்மானம்..,

சிவகங்கையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், செய்தியாளர்களை சந்தித்த போது, உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியான தமிழை வழக்காடு மொழியாக செயல்படுத்தக் கோரி, ஜனவரி 27 மதுரையில் சிறப்பு மாநாடு நடத்த தீர்மானித்துள்ளோம். நீதிமன்றங்களில் இ-பைலிங் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தர்மபுரி வாச்சாத்தியில் பழங்குடி பெண்களை பாலியல் கொடுமை செய்த 269 அதிகாரிகள் தண்டனை பெறுவதற்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்காடி தண்டனை பெற காரணமாக இருந்த வழக்கறிஞர்களுக்கு மாநிலக்குழு பாராட்டி உள்ளது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றியதாக தெரிவித்தார்.