• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அரியலூரில் தமிழக வெற்றி கழகம் 3-வது ஆண்டு தொடக்க விழா..,

ByT. Balasubramaniyam

Feb 2, 2026

அரியலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், கட்சியின் 3-வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம். சிவக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொ. சந்திரசேகர், அரியலூர் நகர செயலாளர் எம்.எஸ்.கே. கார்த்திக், அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கங்காதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் தொடக்கமாக நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கும், செட்டியேரி கரை பூங்காவில் அமைந்துள்ள பெரியார், அம்பேத்கர், காமராஜர், காந்தி ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, கட்சியின் 3-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் இளைஞர் அணி உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.