நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணன் கூறியதாவது குடும்பங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் தம்பதிகளின் கலப்புத் திருமணங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிபிஐ(எம்) கட்சி அலுவலகங்களில் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆறு சரவணன் இதனால் தமிழகத்தில் ஜாதியை வன்முறைகள் நடைபெறும் என்றும் சாதிய மோதல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் எனவே ரத்து செய்ய வேண்டும் எனவும் ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது போல் இராமநாதபுரத்தையும் அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும் என அவர் எச்சரித்தார்.