• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவிற்கு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து…

Byஜெ.துரை

Nov 18, 2023

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தைச் சேர்ந்த, 15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவிற்கு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..,

சமீபத்தில் பிலிப்பைன்ஸில் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற, சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தைச் சேர்ந்த, 15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின சந்தித்தது.

இச்சந்திப்பில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பில் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் M.செண்பகமூர்த்தி, டாக்டர். அதுல்யா மிஸ்ரா ஐ.ஏ.எஸ், J. மேகநாத செட்டி ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.