மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மருந்து வணிகர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மகால் முன்பு குவிந்திருந்தனர்.

கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக திடீரென்று மாநிலத் தலைவர் மாநிலத் தலைவர் செயலாளர் ரமேஷ் தரப்பு மற்றும் மாநில செயலாளர் செல்வன் தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனால் மண்டபம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.இதனை அடுத்து மண்டபத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை எட்டப்படாத நிலையில் நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து மாநில செயலாளர் செல்வன் தரப்பு கூறுகையில் இச்சங்கத்தில் 40000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் சார்பில் கூட்டம் நடைபெற இருந்தது ஆனால் மாநில தலைவர் ரமேஷ் வேண்டுமென்றே ஒரு சில சங்க .ஆட்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு தகராறு ஈடுபட்டனர். இதனால் பெரும் கோஸ்தி மோதல் ஏற்பட்டது. அதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.