தேனியில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பாலமுருகன், செயலாளர் சுருளிஆகியோர் தலைமையிலும் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பண்ணீர் செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 85க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.