• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக எம்.எல்.ஏ.க்கள் இ-மெயில் மூலம் தேர்தல் அதிகாரிக்கு மனு

Byவிஷா

Apr 27, 2024

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஒன்றாக சீல் வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி முடியும் வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அனைத்து சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் அனைத்து அலுவலகங்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில், பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் மீது ஓரிரு நாளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.