• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகம் கருணாநிதியின் குடும்ப சொத்து அல்ல..,

ByKalamegam Viswanathan

Aug 7, 2025

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது;

தமிழகத்தில் என்ன நடைபெறுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிகிறதா? தெரியவில்லையா? என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது. கோவையில் காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மற்றொரு
புறம் காவல்துறை உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இன்றைக்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறைக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

இது சாதாரண விஷயமாக இல்லை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எங்கே இருக்கிறது என்று பூதக்கண்ணாடிகளை வைத்து தேடக்கூடிய நிலையில் தான் இன்றைய நிலை உள்ளது. ஒரு நாட்டின் அமைதி தான் அடித்தளமாக இருக்க வேண்டும், அதனால் தான் அம்மா அவர்கள் அமைதி, வளம், வளர்ச்சி என்றும், அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது சட்ட ஒழுங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி திட்டங்களை செயல்படுத்தினார்.

எடப்பாடியார் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு குறித்து புள்ளி விவர ஆதாரத்துடன் 2.52 மணி நேரம் காவல்துறை மானியகோரிக்கையில் எடுத்து வைத்தார், ஆனால் ஸ்டாலின் இதுகுறித்து எந்த அக்கறை செலுத்தாமல் நாட்டில் எதுவும் நடைபெறவில்லை என மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அதற்கான விளம்பரத்தை செய்தார்.
ஆனால் பிரச்சனைக்கு கவனம் செலுத்தவில்லை, கடந்த நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பிரச்சனைக்கு தீர்வு காணுவது முக்கியமா? பிரச்சனையை திசை திருப்புவது முக்கியமா? பிரச்சனைகளை விளம்பர வெளிச்சத்தில் தான் மறைப்பது முக்கியமா? என்று தான் இருந்தார்கள். வானத்தை போர்வையால் போட்டு மூடி மறைக்க முடியாது அதேபோல உண்மையையும், சத்தியத்தையும் மறைக்க முடியாது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கிறது, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து அமைதியே கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் அமைதி,வளம்,வளர்ச்சி இன்றைக்கு கேள்விக்குறியாக இருப்பதை எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் திமுக ஆட்சியின் உண்மை சுயத்தை தோலுரித்துக் காட்டியுள்ளார்

எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகிறார்கள். இன்றைக்கு 25 வார திண்ணைபிரச்சாரம் வெள்ளி விழா கண்டு, தற்போது 26வது வாரமாக தொடங்குகிறது. 82 மாவட்ட திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் கழக அம்மா பேரவை தொண்டர்கள் இதை எல்லாம் கூற வேண்டும் .

முதல் கட்ட எழுச்சி பயணத்தைக் காட்டிலும்,இரண்டாவது எழுச்சி பயணம் வென்று காட்டி உள்ளது தமிழகம் கருணாநிதி குடும்ப சொத்து அல்ல,மக்களின் சொத்து ஆகவே தமிழகத்தை மீட்டெடுக்க ஜனநாயகத்தை மீட்டெடுக்க எடப்பாடியாரின் கருத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.