• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக சிறப்பான ஆட்சியால் தமிழ்நாடு உயர்ந்துள்ளது..,

ByM.JEEVANANTHAM

Dec 22, 2025

அதிமுகவுடன் உறவாடி கெடுக்கிறது பாஜக. விஜயை வளரவிட்டு அதிமுகவை அழித்து அதன்பிறகு விஜயை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறோம் என்று மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி ஆருடம். எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணியில் 66 லட்சம் பேர் 66 லட்சம் பேர் சரியான முகவரி இல்லாதவர்கள் என்று கூறியிருப்பது சந்தேகமாக உள்ளதாக குற்றசாட்டு:-

மயிலாடுதுறைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்
மயிலாடுதுறை புதிய பேருந்துநிலையம் விரைவில் திறக்க வேண்டும், பாதாளசாக்கடை சீரமைப்பு பணி, காவேரிநகர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்க விட வேண்டும்,

திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளோம். திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தருக்கும், முருகனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை மக்கள் ஒன்றுமையுடன் உள்ளனர்.வெளியூரில் இருந்த வந்தவர்கள் பிரச்னை செய்ய முயற்சிக்கின்றனர். முருகபக்தர் தீக்குளித்தது வேதனை அளிக்கிறது. தவறான பரப்புரையால் ஏற்பட்ட இழப்பு இது. தமிழகத்தை குஜராத்தாக, வடமாநிலமாக மாற்ற முடியாது. திருப்பரங்குன்றத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள் அதனை மக்கள் முறியடித்துள்ளனர். கருர் சம்பவத்திற்கு முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் விஜய் மீது வீசியது. அதன்பிறகு ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசும்போது திமுக தீய சக்தி என்று கூறியுள்ளார்.

அப்படி விமர்சித்த விஜய் கொள்கை எதிரி என்று கூறக்கூடிய பாஜ பற்றி ஏன் பேசவில்லை. மகாத்மாகாந்தி நூறுநாள் வேலை திட்டத்தில் காந்திபெயர் நீக்கியது பற்றி ஏன் பேசவில்லை. அரசியல் களம், மக்கள் மனநிலையை விஜய் இன்னும் படிக்க வேண்டும். திமுகவை விமர்ச்சிக்கும் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தற்போதுவரை பத்திரிக்கையாளரை சந்திக்க மறுப்பது ஏன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். குறைந்த பட்சம் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். மறுப்பது கட்சி தலைவருக்கு அழகா. பத்திரிக்கையாளர்கள் கேள்விக்களுக்கு விஜய் பதில்சொல்லட்டும் அதன்பிறகு அவரை பற்றி பேசுவோம். இன்றைய சூழலில் தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கும் வல்லமை திமுகவிடம் உள்ளது.

அதிமுகவுடன் உறவாடி கெடுக்கிறது பாஜக. விஜயை வளரவிட்டு அதிமுகவை அழித்து அதன்பிறகு விஜயை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறோம். ஆனால் தமிழர்களின் நலனை பாதுகாக்கக்கூடிய தலைமை திமுக இருப்பதால் திமுக கூட்டணியில் இடம்பெறுகிறோம். தமிழக அரசை விமர்சிக்கும் சீமான் ஆட்சி அதிகாரத்தை நோக்கி, பேசக்கூடிய இடத்திற்கு வரவில்லை அதனால் அழுத்தமாக பேசுகிறார். தமிழ்நாடு சிறந்து விளங்குவதால்தான் வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழ்நாட்டை நோக்கி ஓடி வருகிறார்கள். திராவிட மாடலின் சிறப்பான ஆட்சியால் வாழ்வு கொடுக்கும் இடமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

தவறு ஏதாவது நடந்திருந்தால் அதனை திருத்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது அதன்பிறகுத்தான் முழுமையாக தெரியவரும். 66 லட்சம் பேர் சரியான முகவரி இல்லாதவர்கள் என்று கூறியிருப்பது சந்தேகமாக உள்ளது. ஒருவாரத்திற்கு பிறகு முழுமையான விபரம் வெளியில் வரும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும்போது அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில் வளர்ச்சியில் முதல்நிலை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றார். உடன் மாவட்ட செயலாளர் முகமதுநபீஸ், அவைத்தலைவர் தாஜூதீன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சலீம் மற்றும் பலர் இருந்தனர்.