தமிழ்நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் மாநில சங்க கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
தமிழ் நாட்டில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணி புரியும், தமிழ் நாடு அரசு சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் 12_வது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் நடைபெற்றது 12_வது மாநாட்டில் தமிழம் முழுவதும் இருந்து ஆண்,பெண் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்குபெற்றார்கள்.


கன்னியாகுமரியில் நடைபெற்ற 12_வது மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் ஆர்.ஆர் ஜீவா தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாடு குறித்து மாநில தலைவர் ஆர்.ஆர்.ஜீவா செய்தியாளர்களிடம் தெரிவித்தது. சுகாதார பணி ஆய்வாளர் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்படாது உள்ளது. கல்வியின் அடிப்படையில் இந்த பதவி உயர்வின் அடுத்த நிலைக்கு சுகாதார துறை ஆய்வாளர்கள் செல்லமுடியாத நிலையே தொடர்ந்தது நீடித்து வருகிறது.10_ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு கல்வி அடிப்படையில் பணி நிர்ணயம் செய்ய வேண்டும், உயர் கல்வி பெற்றவர்களுக்கு அவர்களது கல்வியின் அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், மேற்பார்வையாளர்கள் பிரதீப்,மணி வண்ணன் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்நிலை பாணியாளர்களும் பங்கு பெற்றார்கள்.