• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இலங்கை கடற்படையினரால் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகை சிறை பிடித்துள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
அதைப்போன்று தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்தது.
தற்போது 16 மீனவர்களையும், இரண்டு விசைப்படகையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த சில வாரங்களாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்துள்ளது ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.