கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை “தனி” தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை “தனி” தொகுதியாக அறிவிக்க வேண்டும்.
தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் குமரி_முதல் சென்னை வரை கோரிக்கை நடைபயணம்.
குமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் இருந்து தாய்தமிழகத்தோடு இணைத்த காலகட்டத்தில், குமரி மாவட்டத்தில். குளச்சல், தோவாளை ஆகிய இரண்டு தொகுதிகளும் தனித் தொகுதியாக இருந்தது. அப்போது குளச்சல் தனித் தொகுதியில் எ.கே. செல்லையா, தோவாளை தனித் தொகுதியில் சாம் ராஜ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

குமரி மாவட்டம் தமிழகத்துடன் 1956_ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
தமிழகத்தோடு இணைந்த குமரி மாவட்டத்தில். கன்னியாகுமரி , நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் இருந்த போது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மட்டும் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியோடு இருந்தது.

தமிழகத்தில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்ட போது, திருவட்டார் தொகுதி அகற்றப்பட்டது. இந்த தொகுதியின் ஒரு பகுதி பத்மநாபபுரத்துடனும், மற்றொரு பகுதி விளவங்கோடு சட்டமன்ற பகுதியில் சேர்க்கப்பட்ட போது, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திருச்செந்தூர் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு.அன்றைய நாகர்கோவில் தொகுதி கன்னியாகுமரி தொகுதியானது.
குமரி மாவட்டம் பகுதியில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பிள்ளை சமுதாயம் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி பிள்ளைமார் தொகுதி என்ற சொல்லாடலுடன், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் பிள்ளை சமுதாய மக்கள் மட்டுமே களத்தில் நின்றனர்.

கால ஓட்டத்தில் இப்போது குறிப்பிட்ட பிரிவினர் என்று இல்லது, அனைத்து சமூக மக்களும் தேர்தலில் களம் கண்டு வந்த நிலையில், தற்போது தலித் இன மக்கள் பெரிய எண்ணிக்கையில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் வசிப்பதால்,
மாநில எல்லை பிரிவிற்கு முன்(கேரள மாநிலத்துடன் இருந்ததுபோல்) கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியாக தேர்தல் ஆணையம் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் மற்றும் மாநிலத்தலைவர் முனைவர்.வை. தினகரன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கன்னியாகுமரி தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தின் முன் இருந்து ஆண்கள், பெண்கள் என 55பேர்(ஆண்கள் 37, பெண்கள் 18) என சென்னை நோக்கிய நடைபயணத்தை தொடங்கியதும். குமரி_சென்னை நடைபயணத்திற்கு காவல்துறையின் அனுமதி இல்லை என தடுத்து நிறுத்தி பேரூந்தில் கோவளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
தலித்துகள் போராட்டம் காரணமாக காந்தி மண்டபம் பகுதியில் அதிரடிப்படையினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்ததை, பன் மொழி சுற்றுலா பயணிகள் ஆச்சரயத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல், போராட்டத்தை, காவலர்களை அவர்களது கை பேசியில் படமும் எடுத்தார்கள்.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வை. தினகரன் கைதுக்கு பின் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களிடம், எங்களின் கோரிக்கைக்கு எந்த கட்சி ஆதரவு தருகிறதோ, அந்த கட்சியுடன் தேர்தல் கூட்டணியை வைத்துக்கொள்வோம் என தெரிவித்தார்.
