• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கணினி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..,

ByT. Balasubramaniyam

Mar 14, 2026

அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கணினி பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றும் கணினி பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,பெண் கணினி பணியாளர்களுக்கு, ஏனைய அரசு பணியாளர்களுக்கு வழங்கிடுவதை போல மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும்,கணினி பணியாளர்களுக்கு நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்கிட வேண்டும், உரிய ஊதிய உயர்வு கணினி பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கணினி மேற்பார்வையாளர் ஆர் கார்த்திக், இளநிலை கணக்காளர் சங்கீதா,தரவு பதிவாளர்கள் ஜெயலட்சுமி ஷர்மிளா உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.