• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை

BySeenu

Oct 30, 2024

முதலமைச்சர் கோவை வருகை விழா நடைபெறும் இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.

புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வர இருக்கிறார்.

இந்நிலையில், விழா நடைபெறும் இடங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமையுள்ள காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.