பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்தஅமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்காக நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் தங்கி விட்டு
இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள 20 அடி உயர வெண்கலத்திலான பசும்பொன் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தி, அதன் பின்பு தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று அரசு சார்பில் மரியாதை செலுத்தி விட்டு சாலை மார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்ல உள்ளார்.