குமரி மாவட்டம் கள்ளகடல் சீற்றம் காரணமாக சேதமடைந்த தேங்காய்பட்டிணம் துறைமுகபணிகளை படகில் சென்று ஆய்வு செய்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்று இருப்பதாகவும், தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி போர்கால அடிபடையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் துறைமுக சீரமைப்பு பணிகள் 253கோடி மதிப்பில் இரயுமன்துறை பகுதில் அலைதடுப்பு சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கள்ள கடல் சீற்றம் காரணமாக 633 மீட்டர் அளவில் சேதம் அடைந்தது இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் படகில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் இந்த பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன இந்த பணிகள் தரமானதாக நடக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி முதலமைச்சரும் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் கொடுத்து ஆய்வு நடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த முகத்துவாரம் வழியாக சென்று மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியும் எனவே போர்கால அடிப்படையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த துறைமுகத்தில் இது முகதுவாரத்தில் மண்திட்டு ஏற்பட்டு முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியார்கள் இது நடைபெறாமல் நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது அரசு 116கோடி ரூ ஒதுக்கீடு செய்துள்ளது ஒதுக்கீடு செய்வது பெரிதல்ல தரமான பணிகளாக இருக்க வேண்டும். அப்படி தரமான பணிகள் செய்திருந்தால் உடைப்பு ஏற்பட்டு இருக்காது என்று தெரிவித்தார்.







