• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு – அரசின் சட்ட சபை அறிவிப்பு 2022_23 உத்தரவு…

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, அரசின் சட்ட சபை அறிவிப்பு 2022_23_யின் உத்தரவை அடுத்தும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த குமரி மாவட்டம், சுதந்திர இந்தியாவில் மொழி, வழி மாநிலங்கள் என்ற அடிப்படையில், 1956_ம் ஆண்டு நவம்பர் 1_ம் தேதி தாய் தமிழகத்தோடு இணைந்த பின்னும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழிபாட்டு முறைகள் இன்று வரை பின்பற்றி வரும் நிலையில், கேரள மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் இடையே உள்ள கலாச்சார பழக்க, வழக்கங்களை ஒற்றுமையுடன், இணைக்கும் வகையில், குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன்,இணை ஆணையாளர் ரத்நவேல் பாண்டியன், மக்கள் தொடர்பு அதிகாரி உன்னிகிருஷ்ணன், திருவட்டார் ஆதிகேசவ கோயில் மேலாளர் மோகன்குமார் ஆகியோர் இணைந்து, அனந்த பத்மநாப சுவாமிக்கு “வஸ்திர” மரியாதை செலுத்தினார்கள். இந்த நடைமுறை இரு மாநில மக்களின் இடையே தொடரும் நல் இணக்கத்தின், நட்பின் அடையாளம். கேரள அரசின் கட்டுப்பாட்டில் இன்றும் குமரியில் பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை உள்ளது.