கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மத விரோதத்தையும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்களே தவிர தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்……
மத நல்லிணக்கம் என்பது கோவையில் தொன்று தொட்டு இருந்தாலும் ஒரு சில அடிப்படை வாத பிரிவினவாத சக்திகள் எதிர்த்தாலும் கூட இங்குள்ள பாரதத்தின் பண்பாட்டை கலாச்சாரத்தை நேசிக்கிற அனைவரும் வரவேற்கிறார்கள் என்றார். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை ஒவ்வொரு இஸ்லாமியரும் மசூதியில் சென்று தொழ வேண்டும் என்பது கட்டாய கடமை என்ற அடிப்படையில் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்தியதாகவும் இந்த தொழுகை நடத்துவதற்காக செல்லும் முன் பல அடிப்படை வாத சக்திகள் வழக்கம் போல பிற மாவட்டங்களில் எப்படி எதிர்பார்களோ வன்முறையை தூண்டுவார்களோ அதே போன்று வேறு ஒரு மசூதியில் தொழுவதற்கு வந்த போது அங்குள்ள காவல் துறையினர் என்னை தாக்குவதற்கு சிலர் இருப்பதாக கூறிய அறிவுறுத்தலின் பேரில் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை செய்தேன் என்றும் குறிப்பிட்டார்.

தற்பொழுது அங்கு தொழுகை நடத்தி வெளியே வரும்பொழுது சில அடிப்படை வாத சக்திகளான எஸ்டிபிஐ, தமுமுக போன்ற சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கோவை மாநகர காவல் ஆணையர் மிகச் சிறப்பான பாதுகாப்பை அளித்ததாகவும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவரை தன்னுடன் அனுப்பி தான் மத கடமை ஆற்றுவதற்கு உதவியதாகவும் அதற்கு காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் மசூதிக்கு சென்றால் கூட தடுத்து கைது செய்யும் நிலையில் கோவை மாவட்ட காவல் ஆணையரை பாஜக சார்பில் மனதார பாராட்டுவதாகவும் முதன்முறையாக மசூதிக்குள் அடிப்படை வாத சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு இஸ்லாமியர் தொழுகை நடத்துவதற்கு கோவை மாநகரில் தடை இல்லை என்பதற்கு உதவிய கோவை காவல் ஆணையரை போன்றே தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிறிஸ்தவர்களுக்கு ஒரு குடிமகனாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கக்கூடிய சட்டம் தான் சிஏஏ ஆனால் அரசியல் புரிதல் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின், கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிறிஸ்தவர் நிகழ்ச்சியில் பேசுகிறார் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தான் ஒரு கிறிஸ்தவர் என்று கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துகிறார் என்றால் தனது சான்றிதழில் இந்து என்ற அடையாளத்தை அழித்து கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை அவர் போட்டுக் கொள்ள தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மத விரோதத்தை இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்களே தவிர தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை எனவே பாரத பிரதமரை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்றும் தேர்தலில் தோற்றுப் போய் விடுவோம் என்ற காரணத்திற்காக மடை மாற்றுவதற்காக சிறுபான்மை மக்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினரை வஞ்சிக்கக்கூடிய அச்சுறுத்தல் பேச்சுகளை ஸ்டாலின் பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றம் அனுமதித்தும் காவல்துறை தடுக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தர்கா நிர்வாகம் தீபத்தூன் எங்களுடையது என்று கூறுவதாகவும் கூறியதுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறுபடை வீட்டின் முதல் படை வீடு 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு முருகனை வழிபாட்டின் மூலமாக தமிழ் பாடல்கள் பாடியதை என்றும் ஆதாரமாக எடுத்துக்காட்டுவதாகவும் ஆனால் தர்கா 300 ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது என்றும் 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த தர்காவிற்கு இடம் கொடுத்தது நமது அண்ணன் தம்பி மாமன் மச்சானாக இருக்க கூடிய இந்துக்கள் தான் எனவும் சுட்டிக்காட்டினார்.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் தர்கா நிர்வாகத்தினருக்கு என்ன பிரச்சனை என்றும் தீபம் ஏர்றுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது அல்ல எனவும் கேள்வி எழுப்பியதுடன்,தர்காவிலிருந்து இதை செய்கிறார்கள் என்றால் முதல்வர் ஸ்டாலினின் தூண்டுதல் இல்லாமல் நடக்காது என்றும் குற்றம் சாட்டினார்.இந்துக்களை மிரட்டுவதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த பாபர் மசூதி கட்டியதாகவும் எங்களுக்கு பாபர் மசூதி போன்று நூறு மசூதி கட்டலாம் ஆனால் எதற்காக பாபர் பெயரில் கட்ட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் பெயரில் கட்டலால் அப்துல் கலாம் பெயரில் கட்டலாம் அல்லது இந்த மண்ணிற்காக உயிர் தியாகம் செய்த அஸ்வத்துல்லா கான் பெயரில் கூட கட்டலாம் என்றும் இந்த மண்ணிற்கு எதிரான பாபர் பெயரில் மசூதி கட்டுவது அயோக்கியத்தனம் என்றும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை இடித்தவன் பாபர் என்றும் கடுமையாக சாடினார்.
மேலும் திருப்பரஙகுன்ற்றத்தில் பாஜக சட்டத்தின் அடிப்படையில் தீபத்தை ஏற்றுவோம் அதை தர்கா கமிட்டி தடுத்தாலும் இஸ்லாமியர்கள் தேசியவாதத்தின் பக்கம் நிற்பார்கள் என்றும் 2026 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தின் போது இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம் திமுக வை வீழ்த்துவோம் என்பதுதான் எங்கள் மிக முக்கிய கடமை எனவும் சூளுரைத்தார்.
இதேபோல் நடிகர் கமல்ஹாசன் கூட திமுக மீது வெறுப்பாக ஸ்டாலினுக்கு எதிராக பேசி டார்ச் லைட்டை வைத்து டிவியை உடைத்ததாகவும் தற்போது திமுக உடன் சென்றதாகவும் கூறிய அவர், அதே போன்று நடிகர் விஜய் பலியாகி விடக்கூடாது என்றும் வாக்குகள் சிதறி வீணாக்காமல் தேசம் மாநிலம் ஒன்றுபட்டு முன்னேற விஜய் நல்ல முடிவு எடுக்க வேண்டும் அது அவருக்கு தாங்கள் வழங்கும் அறிவுரை என்றும் கூறினார்.




