• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம்..,

BySeenu

Dec 16, 2025

கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக முதல் ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம் தொடங்கப்பட்டது.

ஸ்வேக் கஃபே முழுமையாக மாற்றுத்திறனாளிகள் தேநீரகத்தை நடத்தி வருகிறார்கள் இதற்கான தொடக்க விழா .பொருளாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணியை ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சொர்ணலதா ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் போஸ் நிறுவனத்தின் சமூக நல மேம்பாட்டு துறையின் அதிகாரி இமானுவேல் அல்போன்ஸ் . அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்.குரு பிரசாத் . தொழிலதிபர்கள் பாலகோபால். வசுத் பால் மேத்தா. வணிக வளாக மேலாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை நகரில் முக்கிய வணிக வளாகம புரூக்ஃபீல்டு மாலில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ஸ்வேக் கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார மேம்பாடு அடைவதுடன் தன்னம்பிக்கை. ஏற்படுகிறது இந்த கஃபேவில் காபி .டீ மற்றும் பப்ஸ் கேக் .பிஸ்கட். குளிர்பானங்கள். தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சுழற்சி முறையில் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் இதன் மூலம் பயன்படுகின்றன.

இந்தியாவின் சாதனைக்குரிய மாற்றுத் திறனாளி புகைப்படங்கள் அடங்கிய
நான் மிகச் சிறந்தவன் காலண்டர் 2026 தமிழக ஆளுநர் ரவி அவர்களால் வெளியிட்டுள்ளோம் .

கடந்த வாரம் தேசிய மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கரங்களால் சிறந்த சமூக சேவைக்கான விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் பல்வேறு திட்டங்கள் மூலம் மூலம் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரம் உயர சொர்க்க அறக்கட்டளை தொடர்ந்து பல முன்னெடுப்பு பணிகளை செய்யும் என்று சொர்ணலதா கூறினார்.