

மதுரை மக்களவை தொகுதியில், மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர் சட்டமன்ற தொகுதிகள் ஆகும்.
மதுரை மக்களவை தொகுதியானது, 1952-ம் நிறுவப்பட்டது. இதுவரை பத்து மக்களவை உறுப்பினர்கள் பணியாற்றியுள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வி. சுவாமிநாதன், மு.க.அழகிரி, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, காங்கிரசை சேர்ந்த ஏ.ஜி. சுப்புராமன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
மதுரை எம்.பி. அளித்த வாக்குறுதி:
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தேர்தலின் போது, மதுரை விமான நிலையம் விரிவாக்கப்பட்டு தரம் உயர்த்தப்படும் என்றும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்றும், மதுரையில் அரசு தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக மாநகராட்சி பூங்காக்களின் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், மதுரை மெட்ரோ ரயில் நிலைய திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் மக்களிடம் அளித்தார். அவர் அளித்த வாக்குறுதியின் படி, மதுரை ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
அதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது. மதுரை மெட்ரோ ரயில் நிலையத்தை பொருத்தமட்டில் ,அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அவர் முடக்கிவிட்டுள்ளார்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம்:
மதுரை திருமங்கலத்தில் இருந்தும் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் தற்போது நிலை நிலம் அளவிடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
இவை தவிர எய்ம்ஸ் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசனை, பொறுத்தமட்டில் எளிதாக சந்திக்கலாம்:
பொதுமக்கள் அவரை எளிதாக சந்திக்கலாம். மேலும், இதுவரை எந்தவித புகார்கள் இவர் மீது இல்லை என பெயர் பெற்றவர். மதுரை மக்களை பொறுத்தமட்டில் ,
அவர்கள் விடும் கோரிக்கையை ஏற்று மத்திய மாநில அரசு கவனத்துக்கு கொண்டு செல்லும் தூதுவராக உள்ளார். அத்துடன் மத்திய அரசு பணி தேர்வுகளில் தமிழை முக்கியமாக கொண்டு வரவேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் அடிக்கடி குரல் கொடுத்தவர் . இவரை பொறுத்தமட்டில் ,அவர் கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். அவர், மதுரை மக்களுக்கு செய்ய வேண்டிய பணி என்னவென்றால், மதுரையில் ஒரு வாசனை தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
மதுரையில் செயல்பட்டு வந்த மத்திய தகவல் அலுவலகம் ( பி.ஐ.பி)
சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் மதுரையில் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில், நீண்ட நாள்களாக செயல்படாமல் இருந்த பெண் சி.டி. ஸ்கேனை, இயக்க அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதை இயக்க முயற்சி எடுத்து வெற்றியும் கண்டவர் மதுரை எம்.பி. வெங்கடேசன்.
அத்துடன், மதுரை விமான நிலைய விரிவாக்கம் சார்ந்த திட்டப்பணிகள், மதுரையிலிரு ந்து மலேசியாவுக்கு, புதிய விமானம் தொடங்குவது பற்றி அமைச்சரை சந்தித்து முயற்சி எடுத்தவர் வெங்கடேசன் எம்.பி.
எம்.பி. செய்ய மறந்ததை:
மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம், பூக்களை பதப்படுத்தி வைக்க குளிர்சாதன வசதி கிட்டங்கி ஆகியவற்றை குறிப்பிடலாம்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனை பொறுத்தமட்டில், மதுரை மக்களவை தொகுதியானது மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் திமுக கூட்டணியில் ஒதுக்கினால், வெங்கடேசன் மீண்டும் வாய்ப்பு கிட்டும் என, அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும், திமுகவினர் பலர் எம்.பி. தொகுதியை வசப்படுத்த காய்களை நகர்த்துகின்றனர்களாம்.
