• Wed. Jun 26th, 2024

சுவாதி நட்சத்திரம், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்

ByN.Ravi

Jun 18, 2024

மதுரை ,அண்ணா நகர், தாசில்தார் நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த திருக்கோவிலிலே, மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதே போல, இன்று சுவாதி லட்சத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு பக்தர்கள் சார்பில், பால், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, சந்தனம் போன்ற அபிஷே திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள், மற்றும் ஆன்மீக பெண்கள் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக, இக்கோயில் அமைந்துள்ள பால
முருகனுக்கு சிறப்பு விஷயங்கள் நடைபெற்றது. இதை அடுத்து, அலங்காரமாகி அர்ச்சனைகள் நடந்தது. இதில், பக்தர்களுக்கு கலந்து கொண்டு, பால முருகனுக்கு அர்ச்சனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *