இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வருகை தந்தார். அவரை நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அன்புவனத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம், நித்ய அன்னதர்ம சாலை போன்றவற்றை பார்வையிட்டார். அவருடன் கொங்கு வேலுமணி வண்ணன், சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.