• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சுவாமி தேரோட்டம்

ByAnandakumar

May 10, 2025

கரூர் மேட்டுத்தெரு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வாக சுவாமி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கரூர், மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு காலை ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி அலங்காரத்தில் ஆலயம் வலம் வந்த பிறகு ஆலயம் அருகே உள்ள தேர் மீது கொலுவிருக்க செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அபய பிரதான ரங்கநாதசுவாமி சித்திரை மாத தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் சித்திரை மாத தேர் ஆலயம் வந்தது. சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சி காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.