கோவை மாநகராட்சி 84 வது வார்டு பகுதியில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஸ்வச்சதா ஹி சேவா எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைப்பதன் அவசியம் குறித்து தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 84 வது வார்டு பகுதியில் தூய்மையே சேவை எனும் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
முன்னதாக ஜி.எம்.நகர் முதல் வீதி பகுதியில் உள்ள நடை பாதை பூங்காவில் மரக்கன்றுகள். நடும் விழா நடைபெற்றது.
இதில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிரிஜா சுப்ரமணியம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து ஜி.எம்.நகர் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை,மாநகராட்சி 84 வது மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜா உசேன் துவக்கி வைத்தார்.
இதில் பொதுமக்கள் மற்றும் 84 வது வார்டு தூய்மை பணியாளர்கள் இணைந்து சென்றபடி நமது பகுதி நமது தூய்மை என நாம் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தயபடி ஊர்வலமாக சென்றனர்..
இந்நிகழ்ச்சியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் அய்யப்பன், தலைமை பிராந்திய மேலாளர் கிட்டுசாமி,மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கிளை சீனியர் பிராஞ்ச் மேனேஜர் பிரபாவதி , வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சிராஜூதீன் மற்றும் 84 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜா உசேன் மற்றும் எஸ்.டி.பி.ஐ.மாநில செயலாளர் ராஜா உசேன்,மாவட்ட தலைவர் முஸ்தபா, செயலாளர் இசாக், துணை தலைவர் ரஹீம், தொகுதி தலைவர் உமர் ஷரீப்,தெற்கு தொகுதி தலைவர் ஷாஜஹான் வார்டு நிர்வாகிகள் காஜா, சேக், ரியாஸ், அனீபா, அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.