• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது..,

ByKalamegam Viswanathan

Apr 24, 2025

மதுரை மாவட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள சர்வே எண் 87/3C4ல் உள்ள 10.63 சென்ட் இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மனு அளித்தார்.

வலையங்குளம் நில அளவையர் (பிர்கா சர்வேயர்)ராமராஜ் (எ) அன்புராஜிடம் (வயது 35) நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய கோரி சுரேஷின் மனைவி லாவண்யா தேவி மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நில பட்டா மாறுதல் செய்வது தொடர்பாக ராமராஜ் சுரேஷ் இடம் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்காணிப்பில் இருந்தனர் .

இன்று காலை சுரேஷ் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை சர்வேயர் ராம ராஜிடம் வழங்கியதை தொடர்ந்து அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நில அளவையாளர் ராம ராஜிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றி கைது செய்தனர்.

பட்டா மாறுதல் தொடர்பாக சர்வேயர் ராம ராஜ் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்றது வளையங்குளம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.