திருச்செங்கோட்டிற்கு வரவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம் நிலம் அளக்கும் பணிகள் மற்றும் பேருந்து வந்து செல்வதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது இதனை ஏற்று திருச்செங்கோட்டில் தமிழக அரசு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் மண் கரடு மேடு பகுதியில் பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பத்தொன்பது ஏக்கர் நிலம் உள்ளது.இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைய உள்ளது இங்கு பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக வழிகளை தேர்வு செய்யவும் 5 தனியார் இடங்களில் இருந்து இடத்தைப் பெற்று புதிய பேருந்து நிலையத்தை சிறப்பாக அமைக்கவும் ஆன பணிகள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று நில அளவை செய்யும் பணி நடைபெற்றது இதில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,மாவட்ட அளவையாளர் சித்ரா,நகராட்சி சர்வேயர் பூபதி, தாசில்தார் விஜயகாந்த், நகராட்சி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு அலுவலர் ஸ்ரீதர், நகரமைப்பு ஆய்வாளர் செல்வம்,மண்டக பாளையம் கிராம நிர்வாக அலுவலர் விமலா தேவி, நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்பதாவது வார்டு ரமேஷ், 31-வது வார்டு அசோக்குமார், பட்டா உள்நில உடமையாளர்கள் 5 பேர் ஆகியோர் கலந்து கொண்டனர்.