கன்னியாகுமரியில் கடல் நடுவே கட்டப்படும் இணைப்பு பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
பத்தாயிரம் ஆண்டானா 2000_தில் கன்னியாகுமரி கடல் நடுவே கணபதிஸ்தபதியால் உருவாக்கப்பட்ட வான்தொடும் வள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஒரு பெரிய அரசின் விழாவில் தொடங்கி வைத்தார்.
காலம் ஓடியது அதனிடையே 2004 _ டிசம்பர் 26-ம் நாள் குமரியையே புரட்டிப் போட்ட சுனாமி பேரலையோ, வான்புகழ் திருவள்ளுவர் சிலையின் தலை தொட்டு திரும்பியதும், சுனாமி என்னும் பேரலை கூட்டங்கள் சதுராட்டம் ஆடிய போதும். கடல் நடுவே திருவள்ளுவர் சிலை அசையாது “கம்பிரமாக” உயர்ந்து நின்றது.

கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை திறந்து 25_ ஆண்டுகள் கடத்ததின் விழா எதிர் வரும் ஜனவரி திங்கள் முதல் நாள் கொண்டாடும் நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாள் முதலே. திருவள்ளுவர் சிலைப் பாறைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடைப்பட்ட கடல் பரப்பின் பகுதியில் பாலம் அமைத்தால் நலமாக இருக்கும் என்ற அனைத்து நிலை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற. தமிழக அரசு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி ரூ.37 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும் கண்ணாடி இழை பாலத்தை எதிர் வரும் (டிசம்பர்_30)ம் நாள் பிற்பகலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.


கடல் நடுவே நடைபெறும் பாலத்தின் பணியை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில் குமரி ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் அமைச்சர் மகனே தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார்கள்.





