• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்த சூரிய உதயம்

குமரி கடலில் சூரிய உதயத்தை காணமுடியாது உலக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தியாவின் தொன்கோடி முனை கன்னியாகுமரியில் சூரியனின் உதயம், அஸ்தமனம் என்ற இயற்கையின் அற்புதத்தை காணக்கூடிய நிலவியல் அமைப்பு கொண்ட பகுதி.

இன்று (மார்ச்_16)பொழுது புலர்வதி அத்தாட்சியாக, கிழக்கு பகுதி நீலக்கடல் பரப்பில் தொடும் வானத்தில் பல வித வண்ண ஜாலம் காட்டிய பின் ஒளிரும் சூரியன், நீலக் கடலை கிழித்து கொண்டு மெல்ல, மெல்ல கடலில் இருந்து வெளிவரும் அழகு காட்சியைக் காண பன்மொழி, பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட மக்கள் அவர்களது கண்களை அகல விரித்து “சூரிய உதயம்” காட்சியை காண விரும்பி இன்று கன்னியாகுமரி வந்த மக்களுக்கு தொடர் சோதனை போல், அதிகாலை முதலே மழை தூறல் காரணமாக மேகத்தை கார் மேகங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல்,

சூரியனின் உதயம் காட்சியை காண முடியாது உலக சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்த நிலையில், அடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பு, கடலில் அலைகள் சீற்றமாக இருப்பதால்.இன்று கடல் நடுவே உள்ள வான் தொடும் திருவள்ளுவர் சிலை, கடல் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதிகளுக்கு படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம் என்ற அறிவிப்புகள். இன்று கன்னியாகுமரி வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.