பெரம்பலூர் நகர இளைஞரணி மற்றும் 19 வது வார்டு கிளைக் கழகத்தின் சார்பாக, கோடைகால நீர், மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் .
கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் நகர இளைஞரணி செயலாளர் சிவகுமார் மற்றும் 19 வார்டு கிளைக் கழக செயலாளர் செந்தில் ஆகியோரின் ஏற்பாட்டில் சங்குபேட்டையில் கோடைகால நீர் மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் ,மோர் ,வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்பு அருகில் இருந்த அரசு மழலையர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடை வெயிலை சமாளிக்க தர்பூசணிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன்,நகர கழக செயலாளர் ராஜபூபதி,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் கே.என். ராமசாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சி.ரமேஷ், காரியஸ்தர் சரவணன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.