விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி என்பவரது மகன் கவின்குமார் வயது 17 இவர் இராஜபாளையம் ரயில்வே பிட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் இன்று பள்ளிக்கு சென்று உள்ளார் அப்போது கூலிப் புகையிலை பயன்படுத்தியதை பார்த்த ஆசிரியர் கண்டித்து உனது பெற்றோரை அழைத்து வர கூறி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கவின் குமாரின் தகப்பனார் குருசாமி பள்ளிக்கு வர சொல்லி ஆசிரியர் சந்தித்து உங்கள் மகன் புகையிலை பயன்படுத்துகிறார் என கூறியதை அடுத்து கவின் குமாரை குருசாமி வீட்டுக் அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு கவின் குமார் அழைத்து வந்த தந்தை குருசாமி அவரை கண்டித்துள்ளார்.
தந்தை திட்டியதை அடுத்து மனம் உடைந்த கவின் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த வந்த தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.