• Mon. May 20th, 2024

சுசீந்திரம் தாணுமாலையசாமி கோவில் சித்திரை தெப்பத் திருவிழா

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று, சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத் திருவிழா 10_ நாட்கள் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி காலை 6-மணிக்கு திருமுறை பாராயணம், 9_மணிக்கு கொடிப்பட்டமேளா, தாளத்துடன் 4 ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருதல் நடந்தன.

கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் தீபாராதனையை வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிவசுப்பிரசாத் நடத்தினார்..

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொடி தரிசனம் பெற்றார்கள். நிகழ்வில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் பங்கேற்றனர்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, 10_ம் திருவிழாவான(மே-17)ம் தேதி இரவு 8_மணிக்கு தெப்ப திருவிழா நடக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *