தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_வது பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக, கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் குமரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செப்டம்பர் 8_ம் நாள் மருதக்கோட்டில் உள்ள சர்வோதய கிராமத்தில் இருந்த தேசப்பிதா காந்தி அடிகளின் சிலையின் தலையை உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
சிலை சிதைக்கப்பட்டு 22_தினங்கள் கடந்தும் இன்றும் வரை(அக்டோபர்_2)வரை குற்றவாளிகளை. குமரி காவல்துறை கைது செய்யாததை கண்டித்து. கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன் சுப. உதயகுமார் மற்றும் அவரது குழுவினர்
காந்தி மண்டபத்தின் முன் நின்று, தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்யாத காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.