• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை ஆய்வு..

ByKalamegam Viswanathan

Dec 25, 2024

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை மதுரை காவல் ஆணையர் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று லோகநாதன் நேரில் ஆய்வு..

உலக பிரசித்தி பெற்றமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் தைத்திங்கள் முதல் நாள் ஜனவரி 15 அன்று நடைபெறும்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தினை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்..

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் காளைகள் பரிசோதனை மையம் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் மாடுகள் சேகரிக்கும் மையம் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்..

மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் தமிழர் திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு மாடுகள் வெள்ளக்கல் வழியாக அவனியாபுரம் செல்லவும்.

முத்துப்பட்டி வழியாக வரும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக அவனியாபுரம் செல்லவும் போக்குவரத்து போலீசாரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஜல்லிக்கட்டு காளைகளால் எதுவும் காயம் ஏற்படாமல் தடுக்க கம்பி வேலி அமைப்பதற்கும் ஏற்பாடு செய்வ குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.