அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர். எம்ஜிஆர், கூட்டம் மன்றத்தில் , ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி, கஸ்தூரி (வ.ஊ), சந்தாணம் (கி.ஊ),பொறியாளர்கள் த.ரேவதி,காயத்திரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் திருமாவளவன், ராஜவேல்,மணிகண்டன்,ஸ்ரீதர்,ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் இரா.மணிமாறன், இரா.அண்ணாதுரை, நல்லாசிரியர் லயன் நா.கணேசன், மற்றும் ஜெயங்கொண்டம் கிழக்கு, மத்தியம்,தா.பழூர் மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள்,
ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.