• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கோவையில் நீட் யுஜி 2024 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

BySeenu

Jun 6, 2024

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் மாணவர்கள் (ஏஇஎஸ்எல்) நீட் யுஜி 2024 தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 3 மாணவர்கள் 710 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளத்துள்ளனர்.இவர்களுக்கு ஆகாஷ் எஜுகேஷனல் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் விஜய் கிருத்திக் 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 112 இடமும், நிஷா சைபுல்லா 710 மதிப்பெண்களுடன் தரவரிசைப் பட்டியலில் 372 இடம் மற்றும் ஜார்ஜ் 710 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் 455 இடம் பெற்றுள்ளனர்.அதே போல் இங்கு பயின்ற மற்ற மாணவ மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற்று அசத்தினர்.

உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய மாணவர்கள், “உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என இரண்டிலும் எங்களுக்கு உதவிய ஆகாஷிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏஇஎஸ்எல்-ன் உதவி இல்லாமல் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை நாங்கள் புரிந்துகொண்டிருக்க மாட்டோம்” என்றனர்.

மாணவர்களின் சாதனையைப் பாராட்டி பேசிய ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்ன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், “மாணவர்களின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். நீட் 2024 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் சாதனையானது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதரவை பறைசாற்றுகிறது. எங்கள் மாணவர்களின் வருங்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.